திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரியாயிபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த மலைச்சாமி என்பவரது மகன் பிரபாகரன் வயது 31. வாடகை வீ்ட்டில் குடியிருந்து வரும் இவர், அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி துர்கா வயது 28. இவர்களுடைய மகன் ரித்திக் வயது 1. கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வீ்ட்டின் உரிமையாளர் இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீ்ட்டிற்கு சென்று தூக்கில் தொங்கிய துர்காவை மீட்டனர். அப்போது துர்கா உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. மேலும் கட்டிலில் படுத்த நிலையில் கிடந்த குழந்தை ரித்திக்கையும் போலீசார் பார்த்தனர். அப்போது அந்த குழந்தையும் இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும் குழந்தையின் கழுத்தை கையால் நெரித்து கொன்றதற்கான தடயம் இருந்தது. எனவே குழந்தை ரித்திக்கை கழுத்தை நெரித்து கொன்ற துர்கா, அதன்பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து தாய், குழந்தை இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பெற்ற குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது கணவரிடம் துருவி, துருவி விசாரித்து வருகின்றார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனதால் ஆர்.டி.ஓ.விசாரணை மேற்கொண்டுள்ளார்.