மூலிகை மருத்துவத்தில் வெட்டிவேர் ஒரு சிறந்த மூலிகை ஆகும் அதன் பயன்களை பற்றி பார்ப்போம்.
1. வயிற்றுக் கடுப்பு குறைய
வயிற்றுக் கடுப்பு குறைய வெட்டிவேரை பொடிசெய்து அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சேர்த்து வெந்நீரில் அருந்த வயிற்றுக் கடுப்பு குறையும்.
2. வறட்டு இருமல் குறைய
வெட்டிவேரை பச்சையாக எடுத்து அரைத்து அதில் 4 தேக்கரண்டி தேங்காய் பால் ஊற்றி சிறிது தேன் கலந்து படுக்கும் முன் குடித்து வந்தால் வறட்டு இருமல் குறையும்.
3. பேன்கள் குறைய
தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பேன்கள் குறையும். மேலும் பொடுகு குறையும்.
4. காதுமந்தம் குறைய
வெட்டிவேர்த்தூளை காய்ச்சி நல்லெண்ணைய் அதிமதுரம், தேசாவரம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள் இவைகளைபொடித்து காய்ச்சி குளிக்க காதுமந்தம் குறையும்.
5. காய்ச்சல் குறைய
கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்பாடகம், பிரமட்டை, சுக்கு இவைகளை எடுத்து தண்ணீரில் போட்டு சுண்டகாய்ச்சி சாப்பிட்டுவர காய்ச்சல் குறையும்.
6. விந்து கோளாறு குறைய
இலவம் மரத்தின் விதை, பழம், வெட்டிவேர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து அதனுடன் ஓமம் சேர்த்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் விந்து கோளாறுகள் குறையும்.
7. தாகசிரம் நீங்க
கோரைகிழங்கு,சந்தனம்,வெட்டிவேர் பற்பாடகம்,பிரமட்டை கஷாயம் குடித்து வர தாகசிரம் நீங்கும்.