காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் ஜாலி பன்னிய மனைவி; வெட்டி தள்ளிய கணவன்

சேலத்தில் காதலர் தினத்தன்று கள்ளக் காதலனுடன் ஜாலியாக இருந்த மனைவியைப் பார்த்து ஆத்திரமடைந்தார் லாரி டிரைவர் மனைவியை சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார்.


உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கள்ளக்காதலர்கள் இருவர் கணவரிடம் சிக்கி அடி வாங்கிய சம்பவம் சேலத்தை அதிர வைத்துள்ளது. சேலம் மாவட்டம் நடுவலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். லாரி டிரைவராக இருக்கிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.


இந்த நிலையில் சின்னதுரை என்பவருடன் கள்ளக் காதலில் திளைத்தார் பிரியா. இந்த சின்னதுரை வீட்டுக்கு டெய்லி பால் ஊற்ற வரும் பால் வியாபாரி. இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

தினமும் காலையும், மாலையுமாக வந்து பால் ஊற்றிய சின்னதுரை பிரியாவுடன் ரொம்பவே நெருங்கி விட்டார். இதைக் கேள்விப்பட்ட பிரகாஷ் மனைவியைக் கண்டித்தார். சின்னதுரையை இந்தப் பக்கம் கூட வரக் கூடாது என்று எச்சரித்தார். சின்னதுரையும் வீட்டுக்கு வந்து பால் ஊற்றுவதை நிறுத்தினார். ஆனால் இந்த கூட்டுக் களவாணிகளும் வேறு ரூபத்தில் காதலை வளர்த்து வந்தன. அதாவது பிரியா சின்னதுரை வீடு தேடி போய் விளையாட ஆரம்பித்தார். இப்படித்தான் நேற்று காதலர் தினம் வந்தது. நேற்று வெளி வேலையாக போயிருந்த பிரகாஷ் வீடு திரும்பினார். வீட்டில் பிரியா இல்லை. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது "அவ அந்த சின்னதுரை வீட்டுக்குதான் போயிருக்கா என்று கூறவே அதிர்ச்சியானார் பிரகாஷ். வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு சின்னதுரை வீட்டுக்கு ஓடினார். அங்கு போய்ப் பார்த்தால் கள்ளக்காதல் ஜோடி படு குஷியான நிலையில் காணப்பட்டனர். அவ்வளவுதான் அரிவாளை எடுத்து பிரியாவை சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார் பிரகாஷ். கூடவே சின்னதுரைக்கும் வெட்டு விழுந்தது. இரண்டு பேரும் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடு வந்து பிரகாஷை தடுத்தனர். வெட்டுப்பட்ட சின்னதுரையும், பிரியாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.



Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image