அரசு மருத்துவனையில் திருப்பூர்அனைத்து இஸ்லாமிய ஜமாத்தின் கூட்டமைப்பினரின் சேவை உண்மையிலேயே பாராட்டத்தக்கது, கேரளாவிலிருந்து வந்திருந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு, கேரள காவல் துறை அதிகாரிகளுக்கு, தமிழக காவல்துறை மற்றும் அதிகாரிகளுக்கு, மேலும் பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் தண்ணீர், டீ, பிஸ்கட், மதிய உணவுகள் என அனைவருக்கும் அளித்தனர் மேலும் இதர்கென்றே தனியாக சேவகர்களை (Volunteers) நியமித்து அவர்கள் தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் என்ன வேண்டும் என கேட்டு அவர்களுக்கான உதவிகளை செய்தனர். குர்பானி ட்ரஸ்ட் Ahamedfaisal Faisal அவர்கள் மற்றும் அவரின் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏக இறைவன் மேலும் உதவி புரிவானாக தமிழக அரசும் இந்த விஷயத்தில் மிகவும் வேகமாக பணியாற்றியது கேரளத்திலிருந்து வந்திருந்த அமைச்சர்கள் ,நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்காள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட இந்த மின்னல் வேக மீட்பு பணிகளை வெகுவாக பாராட்டினர் இதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்களை மனதார பாராட்டி நன்றி தெரிவித்து கொள்கின்றோம்.
ஆம்.,மனிதநேயம் என்றும் மரணிப்பதில்லை.