கழுத்துக்கு கீழே சுருக்சுகமா அப்போ இதை செய்யுங்க

வயது முதிர்வு காரணமாக கழுத்து பகுதியில் சுருக்கங்கள் வருகின்றன. முகத்தில் படும் தூசுகள், சூரிய ஒளி மற்றும் புகை போன்றவை நம் சருமத்தில் முதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க கீழ்கண்ட முறைகளை செய்து பொலிவு பெறலாம்.




உங்கள் முகத்தை கழுவும்போது, உங்கள் கழுத்தையும் சேர்த்து சுத்தப்படுத்துதல் அவசியம். முகத்தை எந்தஅளவிற்கு கவனிப்பீர்களோ அதேபோல் கழுத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அழுக்கு மற்றும் தூசு போன்றவை படியாமல் இருக்க செய்யும். சோப்பு பயன்படுத்துவதைக் காட்டிலும் மூலிகை சோப்பு மற்றும் மூலிகை க்லேன்சரை பயன்படுத்தலாம். இது உங்கள் முகத்திற்கு பொலிவை தருவது மட்டுமில்லாமல் சமநிலையை மாற்ற செய்கின்றது.

வீட்டை விட்டு வெளியே செல்கையில் முகத்திற்கு சன்- ஸ்கிரீன் பயன்படுத்தலாம். அது உங்கள் முகத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க செய்யும். வாரத்திற்கு ஒருமுறையாவது உங்கள் முகத்தை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். காரணம் அப்பொழுதான் உங்கள் சருமம் பொலிவுடனும், பளபளப்புடனும் இருக்க செய்யும்.
அதிக அளவு நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். காரணம் நம் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதால் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மட்டுமே முகத்தில் சுருக்கங்களும், கோடுகளும் வராமல் இருக்க செய்யும்.

எஸ்தடிக் அறுவை சிகிச்சை முறை மற்றும் போட்டுலினம் டாக்ஸீன் ஆகிய முறைகளை பயன்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்க செய்யலாம். வைட்டமின்- சி உடைய கீரிம்களை நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையென்றால் சீரம் உபயோக்கிக்கலாம். இவை நமக்கு ஆன்டி- ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு பிற ஊதா கதிர்களிலிருந்து நம்மை காக்க செய்கின்றது. இதன் காரணமாகத்தான் கொலோஜன் உற்பத்தி அதிகரிக்க செய்கின்றது.

இந்த முறைகளை மட்டும் நீங்கள் பாலோ செய்தால் போதும் உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகள் மறைந்து விடும். உங்கள் கழுத்தும் பளபள வென ஜொலிக்கும். 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image