உடுமலையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வெளிநாட்டு வேலைக்கும் பதிவு செய்யலாம்

உடுமலையில் வரும் 15ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெ உள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், உடுமலையில் உள்ள ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வரும், 15ம் தேதியன்று காலை, 8:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்சியில் கோவை, சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்கள் தேர்வு செய்கின்றனர். இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் திறனை மேம்படுத்தும் வகையில்,  திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் பயிற்சி அளிக்க உள்ளனர். மேலும், தமிழக அரசு நிறுவனமான, அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாக, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இம்முகாமில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன் பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ, தொலைபேசி எண் : 0421- -2971152 அல்லது 94990 55944 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Popular posts
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020