திருப்பூர் மாவட்டத்தில் பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகம்
திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து ஆயிரத்து 481 வாக்காளர்கள். ஆண்களை விட 17592 பெண் வாக்காளர்கள் அதிகம் என திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.

 


 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் டாக்டர் விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியது, கடந்த ஆண்டு மார்ச் 23 இல் வரைவு வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு முகாம்களில் வாக்காளர்கள் சேர்ப்பு, திருத்த பணிகள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 2484 வாக்குச்சாவடி கள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 11,41,756 பேர். பெண் வாக்காளர்கள் 11,59,448 பேர். மொத்த வாகாளர்கள் எண்ணிக்கை 23,01,481 பேர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 277 பேர்.  மாவட்டத்தில் 17692 பேர் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கையை விட அதிகம். இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் 54,178 பேர் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. 2347 பேர் பெயர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் 3553 பேர் முகவரி மாற்றம் செய்துள்ளனர். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என்றார்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு