ஆயிரம் ரூபாய் நோட்டில் தஞ்சை பெரியகோயில்
தஞ்சை பெரிய கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரியகோயிலின் அழகிய தோற்றம் பதிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் நான்காவது ஆளுநரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார்.
தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின.
இந்த ஆயிரம் ரூபாய் நோட்டு 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த நோட்டு நடைமுறையில் இருந்துள்ளது.