மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக NRC, CAA, NPR, எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வண்ணாரபேட்டை தாக்குதலை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக CAA NRC NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக, எதிர்ப்பு பொதுக் கூட்டம், ஆம்பூர் காயிதே மில்லத் நகரில் மிக எழுச்சியோடு நகர தலைவர் தப்ரேஸ் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
மமக நகர செயலாளர் ஜமீல் அஹ்மத் Ambur Jameel Tmmk வரவேற்றார், தமுமுக நகர செயலாளர் நபீஸ் அஹ்மத், தொகுப்புரையாற்றினார், மாவட்ட செயலாளர் அப்துல் ஷுக்கூர், தமுமுக மாவட்ட செயலாளர் சையத் ஜாவித், மாவட்ட பொருளாளர் அப்துல் மன்னான், மற்றும் தமுமுக, மமக நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த சட்டங்களுக்கு எதிராக மமக மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, எழுத்தாளர் வே.மதிமாறன், தலைமை கழக பேச்சாளர் ஓசூர் நவ்ஷாத், IPP மாநில துணை செயலாளர் சனாவுல்லா, மாவட்ட தலைவர் நசீர் அஹ்மத், ஆகியோர் எழுச்சிமிக்க உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளராக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் அல்தாப் அஹ்மத், முத்தவல்லி பஷிர் அஹ்மத், முன்னால் நகரமன்ற தலைவர் வாவூர் நசீர் அஹ்மத், திமுக விவசாயி அமைப்பாளர் சுந்தர், திமுக மாவட்ட பிரதிநிதி தமிழரசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள், ஜமாத்தார்கள், பெண்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் அல்லா பகஷ் நன்றி உரையாற்றினார்.