சென்னை ஓட்டேரியில் வாகன சோதனையின் போது இளைஞரை கட்டையால் தாக்கிய சிறப்பு எஸ்ஐ

சென்னை ஓட்டேரியில் வாகன சோதனையில் அத்துமீறல் ஹெல்மெட் அணியாததால் கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டை உடைப்பு : தப்ப முயன்ற சிறப்பு எஸ்ஐ. சிறை பிடிப்பு.


சென்னை ஓட்டேரி பகுதியில் புளியந்தோப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஓட்டேரி இஎஸ்ஐ குடியிருப்பு பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் சுரேந்தர் (19) என்பவரை மடக்கிப் பிடித்தார். அப்போது, அவர் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் அபராதம் விதிப்பதாகக் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ கூறினார். இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி எஸ்ஐ ரமேஷ், சுரேந்தரை கட்டையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. 


இதில் சுரேந்தருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் எஸ்.ஐ.யை தாக்க முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வள்ளி, சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதுகுறித்து இளைஞர் சுரேந்தர் அளித்த புகாரின்படி, உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image