நாடு முழுவதும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

நாடு முழுவதும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாப்படுகிறது.


மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.


மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.


பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்!


சிவராத்திரியையொட்டி இன்று விரதம் இருக்கும் பக்தர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து ஓம் நமச்சிவாய என சிவபெருமானின் திருநாமத்தை ஜபிக்கின்றனர். தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடியும், சிவனுக்கு பூஜைசெய்தும் வழிபாடு நடத்துகின்றனர்.


மகாசிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர் , காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image