வாரணாசி - இந்தூர் இடையே இயக்கப்படும் காசி - மஹாகல் விரைவு ரயிலில் ஒரு படுக்கையை கடவுளான சிவனுக்கு ஒதுக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
நாட்டின் மூன்றாவது தனியார் ரயில் சேவையான இந்த ரயிலை தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அதில் குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பெட்டியான பி5-இல் உள்ள 64-ஆம் எண் படுக்கையில் சிவனின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அந்த படுக்கையை சிவனுக்கு ஒதுக்க இருப்பதால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஜோதிர்லிங்க கோயில்களை இணைக்கும் வகையில் விடப்படும் இந்த ரயிலில் சைவ உணவு மட்டுமே விநியோகிக்கப்படும் என்று நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.