ஆட்டோ செலவை குறைக்க மெட்ரோ ரயிலில் சைக்கிள் எடுத்து செல்லலாம் - மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு


சென்னையில் மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப் பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டு முதல் கட்டாக 42 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் பாதை அமைத்து மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் பயணிகள், பொது மக்களை கவரும் விதமாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணத்தின் போது ‘ஸ்மார்ட்’ சைக்கிள் மற்றும் சிறிய அளவிலான மடக்கு சைக்கிள்களை எடுத்துச் செல்லலாம் என மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.


இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது சொந்த சைக்கிள்கள் மற்றும் ஸ்மார்ட், மடக்கு சைக்கிள்களை மெட்ரோ ரெயில் பயணத்தின்போது எடுத்து செல்ல அனுமதி வழங்கி உள்ளோம்.


இதன் மூலம் பயணிகள் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரும் சைக்கிளை மெட்ரோ ரெயில் பயணத்தின்போது உடன் எடுத்து செல்லலாம். ரெயிலில் யாருக்கும் இடையூறு இல்லாதவாறு கொண்டு செல்ல வேண்டும்.


இதன் மூலம் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ஆட்டோவில் வரும் பயணிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவு மிச்சப்படும் என்று தெரிவித்தார்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image