உத்தரப்பிரதேசத்தில் இருசக்கர வாகனத்திற்கு சுங்கவரி கேட்டு தகராறு செய்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.
அமேதி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் சிலர் கூட்டமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சுங்க வரி கட்டி விட்டுச் செல்லுமாறு சுங்கச்சாவடி ஊழியர்கள் கண்டிப்பு காட்டினர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. சுங்கச்சாவடி ஊழியர்களின் செயலால் கடும் கோபம் கொண்ட மற்றொரு தரப்பினர் துணைக்கு ஆட்களை அழைத்து வந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.
மேலும் அங்கு பணியிலிருந்த ஊழியர்களையும் சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கவுரிகன்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்