ஓசூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பேரணி

வண்ணார்ப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை தாக்கிய காவல்அதிகாரிகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓசூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய மாநில பொதுச்செயலாளர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.



பாப்புலல் பிரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு தொடங்கப்பட்டு இன்றுடன் 13 ஆண்டில் நுழைவதால் இன்று பாப்புலர் தினமாக கடைபிடித்து தமிழகத்தில் நாகப்பட்டிணம், ஓசூர், திண்டுக்கல் ஆகிய மூன்று இடங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது, அதன் ஒருபகுதியாக ஓசூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஓசூர் இராகவேந்திரா கோவில் முதல் இராம்நகர் வரை பேரணியாகவும் சீறுடை அணிந்த ஆடவர் படை அணிவகுத்து பேரணியாக வந்தனர்.


பேரணியில் மத்திய பாஜக அரசைக்கண்டித்து கண்டன கோஷங்களையும், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டாமென அதிமுக அரசையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தமிழக மாநில பொதுச்செயலாளர் ஹாலித்:



தேசம் முழுவதும் CAA,NRC, NRP சட்டங்களை எதிர்த்து மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது, இந்த கோரிக்கையை மத்திய அரசு கொஞ்சம் கூட பரிசீலிக்காத ஆணவ போக்கை வண்மையாக கண்டிப்பதாகவும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாக இருந்தாலும் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அந்த சட்டத்தை திரும்ப பெறுவது மக்களாட்சியின் அடையாளமாக இருக்க முடியும் எனவே மத்திய அரசு இதுப்போன்ற சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக்கொண்ட.


சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்களை தாக்கும் அதிகாரம் போலிசாருக்கு யார் கொடுத்தது, பெண்களை தாக்கிய காவல்அதிகாரிகள் மீது தமிழ்நாட்டின் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார், மேலும் பேசிய அவர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வெளிநாட்டு பணத்தை பெற்று செயல்படுவதாக பொய் பிரச்சாரங்களை செய்து வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு பேசினார்


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு