குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை- பிரதமர் மோடி திட்டவட்டம்

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 



வாரணாசி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து, வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை, நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர், உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையையும் திறந்து வைத்தார்.


பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வாரணாசி உள்ளிட்ட புனித தலங்கள், புதிய தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றார். பாரம்பரிய சின்னங்களை உள்ளடக்கிய சுற்றுலா தலங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் என்றும் பிரதமர் மோடி கூறினார். அயோத்தியில் மத்திய அரசின் கைவசமுள்ள 67 ஏக்கர் நிலத்தையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்த பிரதமர், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்வட்டமாக கூறினார்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு