திருச்செந்தூா்; வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள் தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.



கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.10 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய த.அசோகன் வல்லவராயா் திருவிழாக் கொடியினை ஏற்றினாா்.


அதன்பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளா் ராமசுப்பிரமணியன், திருவிழா பணியாளா் பிச்சையா, மணியம் நெல்லையப்பன், தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்ரமணிய ஆதித்தன், சு.வேலாண்டி ஓதுவாா் மற்றும் சிவா உள்ளிட்ட திருக்கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 25-ம் தேதி காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.


 


Popular posts
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020