பனியன் நிறுவனத்தில் தீ விபத்து


திருப்பூர் பாரப்பாளையம் பூச்சக்காடு பகுதியில் பாலாமணி(வயது 52) என்பவர் சொந்தமாக பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். தரைத்தளம் மற்றும் 3 மாடிகளுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிகள் நடந்தது. இரவு 12.30 மணிக்கு மேல் ஊழியர்கள் பணியை முடித்து புறப்பட்டனர்.


இந்தநிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் பனியன் நிறுவனத்தின் முதலாவது மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை அங்கிருந்த ஊழியர்கள் கவனித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. தீ மளமளவென பரவியது.

உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதல் மாடியில் பற்றிய தீ 2-வது, 3-வது மாடிக்கும் பரவியது. இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு, அவினாசி, பல்லடம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு பணியை முடுக்கி விட்டார். 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 20 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டன.

நேற்று காலை 8 மணி வரை தீயணைப்பு பணி நடந்தது. அதன்பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தையல் எந்திரங்கள், ஆடைகள் தயாரிக்க பயன்படுத்தும் துணிகள், தயாரிக்கப்பட்டு ஏற்றுமதிக்கு தயாரான ஆடைகள் ஆகியவை எரிந்து நாசமானது. சேத மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மின்கசிவு காரணமாக விபத்து நடந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் விடிய, விடிய தீயணைப்பு பணிகள் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image