திருப்பூர்; தொடர் தூய்மை திட்ட முகாம் நிறைவு.




தொடர் தூய்மை இந்தியா திட்ட முகாம் நிறைவு விழா

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு-2, சார்பில்  கடந்த 5 நாட்களாக மத்திய அரசின் மெகா தூய்மை இந்தியா திட்ட முகாம் திருப்பூரில் மக்கள் அதிகமாக கூடும் பல்வேறு பகுதிகளில் நடை பெற்றது. இந்த முகாமின் நிறைவு  இடுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.  இந்த 5 நாள் முகாமிற்காக ரூ.50 ஆயிரம் நிதியினை ஒதுக்கி இருந்தது.

நிகழ்ச்சிக்கு ஆசிரியர் முருகன்  வரவேற்று பேசினார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கலந்து கொண்டு பேசுகையில், தூய்மை இந்தியா திட்டம் எதற்காக செயல்படுத்தப்படுகிறது என்பதை விரிவாக பள்ளி மாணவர்களுக்கு விளக்கிக்கூறினார், பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும், மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்த வேண்டும், வெளி இடங்களில் மலம் கழிக்கக் கூடாது,  குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும், மரம் வளர்க்க வேண்டும், சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும், கைப்பேசி, தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து ஓடி விளையாட வேண்டும்,  இப்பருவம் மிக முக்கியமானது, மனதில் ஆழமாக பதியக்கூடிய பருவம் ஆகையால் மேற்கூறிய அனைத்தையும் மாணவர்கள் கடை பிடித்தால் தூய்மை இந்தியா திட்டம் முழுமையாகும் என்று கூறினார்.

பள்ளி தலைமை ஆசிரியை வள்ளிநாயகம் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். பள்ளி மாணவர்களுடன். பள்ளி ஆசிரியர்களும்,  அலகு 2 மாணவர்களும் தன் வீடு, தன் பள்ளி, கல்லூரி, தான் வசிக்கும் பகுதியினை தூய்மையாக வைத்திருப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.  பிறகு அலகு 2 மாணவர்கள் பள்ளியில் புதர் போன்று மண்டி கிடந்த பகுதிகளை சுத்தம் செய்தனர், வகுப்பறைகளை சுத்தம் செய்து கொடுத்தனர், மாணவ செயலர் பேரரசு தலைமையில் மாணவர்கள் பள்ளியின் உட்சுவர் முழுவதும் கண்கவரும் ஓவியங்களை வரைந்தனர். இறுதியாக  சந்தோஷ் நன்றியுரை வழங்கினார். இப் தூய்மை பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அலகு 2 மாணவர்களின் சுறுசுறுப்பான செயல்பாட்டை  ஆசிரியர்களும், பெற்றோர்களும், பொது மக்களும் பாராட்டினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் தீபா செய்திருந்தார்.





Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு