சாலை அகலப்படுவதை முழுமையாக அகல படுத்தவும், பாலங்கள் அமைக்கவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.
பந்தலூரில் இருந்து உப்பட்டி பொன்னானி குந்தலாடி வழியாக பாட்டவயல்மற்றும் சுல்தான் பத்தேரி செல்லவும், பிதர்காடு, நெலக்கோட்டை குந்தலாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிப்போர் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட வற்றுக்கு வந்து செல்லும் முக்கிய சாலையாக பந்தலூர், உப்பட்டி முக்கட்டி சாலை உள்ளது. இந்த சாலையானது சாதாரண சாலையாக இருப்பதால் அகலம் குறைவாக உள்ளது இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க இயலாத நிலை இருந்து வந்தது.
அதனால் இந்த சாலையை அகலப்படுத்த பல தரப்பினரும் கோரிக்கை முன் வைத்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறை சார்பில் நிதி ஒதுக்கி அகலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சாலை முக்கியமாக அகலப்படுத்த வேண்டிய இடங்களில் அகலப்படுத்த்தாமல் உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் நிலகிரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருபதாவது.
பந்தலூர் முனீஸ்வரன் கோவில் முதல் முக்கட்டி வரையிலான சாலை அகலப்படுத்தும் பணி சிமெண்ட் கலவை மூலம் மேற்கொள்ள பட்டு வருகிறது. ஆனால் முனீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்த பணி அருகில் கல்லட்டி எனும் பகுதியில் குறுகிய வளைவு, மேங்கோரங்ஞ் மருத்துவமனை அருகில்,
தொண்டியாளம் நகர் பகுதி, அம்புரோஸ் வளைவு எனும் பகுதியில் குறுகிய தூரம் அகலப்படுத்த வில்லை.
அதுபோல உப்பட்டி வரை அகலப்படுத்திய பின் பொன்னானி அருகே சர்ச் பகுதிக்கு சென்று விட்டனர். இடையில் உப்பட்டி முதல் பொன்னானி அருகே சர்ச் வரை உள்ள இடங்கள் அகலப்படுத்த வில்லை. இந்த பகுதிகளில் அதிக போக்குவரத்து உள்ள பகுதியாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகவும் சிரம்மபடுகின்றனர்.
இந்த பகுதிகள் அகல்படுத்தவும், வளர்ந்துள்ள முட்செடிகள் வெட்டி அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல இந்த சாலையில் தொண்டியாளம் பகுதியில் உள்ள பாலம் பழுதடைந்து உள்ளது. பாலம் மிகவும் வளைவன இடத்தில குறுகியதாக உள்ளது.
இதனால் இந்த பாலத்தில் வாகனங்கள் சென்று வர சிரம்மபப்டும் நிலை உள்ளது. முக்கட்டி அருகே பெக்கி எனும் இடத்தில். கடலைகொள்ளி செல்லும் சாலையின் சந்திப்பு அருகே தற்போது குழாய் மூலம் தண்ணீர் செல்ல அமைக்கப்பட்ட பாலம் பாதிப்படைந்து உள்ளது.
எனவே, இந்த பாலங்களை புதுப்பித்து அகலப்படுத்தி தர வேண்டும் எனவும், பல இடங்களில் போடப்பட்டுள்ள மழை நீர் செல்லும் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இவற்றை ஒழுங்கு படுத்தி சீரமைத்தால் மழை காலங்களில் சாலைகள் சேதமடைவதை தவிர்க்க முடியும். மாநில நெடுஞ்சாலை துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.