பல்லடம் சின்னிய கவுண்டம் பாளையத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய மூவர் கைது

பல்லடம் சேடபாளையம் பிரிவு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் ரவி (52). இவர் பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் பயணியை ஏற்றிக் கொண்டு பல்லடம் செட்டி பாளையம் ரோட்டில் உள்ள சின்னிய கவுண்டம் பாளையத்திற்கு சென்றார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் முன் கண்ணாடி உடைந்து விட்டது.

ஆட்டோவில் வந்த பயணிக்கும், டிரைவர் ரவிக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. பின்னர் ஆட்டோவை தூக்கி நிறுத்த அருகில் உள்ளவர்களை அழைத்த போது அங்கு வந்த 3 பேர் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி விட்டாய் என ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறி 3 பேரும் ரவியை தாக்கினார்கள்.

இது குறித்து ரவி ஆட்டோ ஸ்டாண்டு நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார். ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து பல்லடம் மகாலட்சுமி புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (46) அங்கு வந்தார். அவர் ரவியை அடிப்பதை தடுத்தார். அவரையும் 3 பேர் தாக்கினார்கள். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர். 3 பேர் தாக்குதலில் காயம் அடைந்த ரவி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியிலும், ரவிச்சந்திரன் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


ஆட்டோ டிரைவர்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர்களை தாக்கிய சின்னிய கவுண்டம் பாளையம் மணிவண்ணன் (43), கதிர்வேல் (45), சுரேஷ்குமார் (34) ஆகியோரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.



Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image