திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர்.எஸ். பாரதி ஒருகட்டத்தில் ஊடகத்தினர் பற்றியும் ஊடக நிறுவனங்களை பற்றியும் மிக வன்மையான முறையில் பேசியுள்ளார். இந்தப் பேச்சு ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களிடையே மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டின் ஒவ்வொருவருக்கும் உள்ள கருத்துரிமையை இதுபோன்ற வன்மையான பேச்சுக்களின் மூலம் கேலிக் கூத்தாகும் ஆர்.எஸ்.பாரதியின் இந்த செயலை திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. மிகப்பெரிய கட்சியின் மிக முக்கிய பதவியில் வகிக்கும் இது போன்ற தலைவர்களின் பேச்சு இனி எந்த ஒரு நபருக்கும் முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம்.
TIRUPUR DISTRICT JOURNALISTS' ASSOCIATION ( TDJA )