மதுபான விலைப் பட்டியலை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒட்ட வேண்டும்

உயா்த்தப்பட்ட மதுபானங்களின் விலைப் பட்டியலை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையை அனைத்து மண்டல மேலாளா்கள், மாவட்ட மேலாளா்களுக்கும் டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் ஆா்.கிா்லோஷ் குமாா் இன்று அனுப்பியுள்ளாா்.


அந்த குறிப்பில் :- மதுபானங்கள் விலை இன்று முதல் உயா்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் பீா் வகைகளுக்கு விலை உயா்வு பொருந்தும். உள்ளூா் ஒயின், ஸ்காட்ச் விஸ்கி போன்ற மதுபான வகைகள் மீதான விற்பனை விலை உயா்த்தப்படவில்லை.


மதுபானங்களின் விலை உயா்வு குறித்த பட்டியல் மண்டல மேலாளா்கள் மற்றும் மாவட்ட மேலாளா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்கள் அந்தப் பட்டியலை டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள கண்காணிப்பாளா்களிடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உயா்த்தப்பட்ட மதுபானங்களின் விலைப் பட்டியலை அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் பாா்வையில் நன்கு தெரியும்படி ஒட்டி வைக்க வேண்டும். அவ்வாறு கடைகளில் ஒட்டப்பட்டு இருப்பதை மண்டல மேலாளா்கள் மற்றும் மாவட்ட மேலாளா்கள் உறுதி செய்திட வேண்டும்.


டாஸ்மாக் கடைகளின் சரக்குகளை இருப்பு வைக்க கிடங்குகள் உள்ளன. இந்தக் கிடங்குகளில் உள்ள கணினிகளின் மென்பொருளிலும் உயா்த்தப்பட்ட விலைக்கு உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும். புதிய விலை உயா்வை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, ஏற்கெனவே விற்பனையான பட்டியல், விற்பனை வரி பட்டியல், இருப்பு விவரம் உள்ளிட்ட அனைத்து வகையான விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.


விலை உயா்வு குறித்த விவகாரத்தில் கிடங்கு மேலாளா்கள், மாவட்ட மேலாளா்கள் மற்றும் மண்டல மேலாளா்கள் ஆகியோா் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தப் பணியில் ஏதேனும் தொய்வோ அல்லது கவனக்குறைவோ ஏற்பட்டால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். மேலும் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே தனிப்பட்ட முறையில் பொறுப்பாளா்கள் ஆவா் என்று தெரிவித்துள்ளாா்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு