இந்தியாவிற்கு கிடைத்த மீண்டும் ஒரு அப்துல் கலாம். எதுவும் என் நாட்டிற்கே என்று நாசா அழைப்பை நிராகரித்த இந்திய இளைஞர் கோபால்ஜி.
பீஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள துருவ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் ஜி. 19 வயதாகும் இவர் பி.டெக்., படிக்கிறார். சிறு வயது முதல் அறிவியல் கண்டு பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். கோபால்ஜி, 10ம் வகுப்பு படித்த போது, வாழை இலை மற்றும் காகிதத்தில் இருந்து 'பயோசெல்'களை கண்டுபிடித்ததற்காக, அவருக்கு 'இன்ஸ்பயர் விருது' தரப்பட்டது.
கிழக்காசிய நாடான தைவானின் தலைநகர், தைபேவில் நடந்த கண்காட்சியில், கோபால்ஜியின் கண்டுபிடிப்பை பார்த்து, பல நாடுகளின் நிறுவனங்கள் அவரை அழைத்தன.
இதற்கிடையே, 2017, ஆகஸ்ட், 31ல் பிரதமர் நதேந்திர மோடி, கோபால்ஜியை அழைத்து பாராட்டினார். இந்த சந்திப்புக்கு பின், ஆமதாபாதில் உள்ள, 'நேஷனல் இன்னொவேஷன் பவுன்டேஷனு'க்கு அனுப்பப்பட்ட கோபால்ஜி, அங்கு, 34 அறிவியல் கண்டு பிடிப்புகள் உருவாக்கியதுடன், இரண்டுக்கு கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றுள்ளார்.
இந்நிலையில், கோபால்ஜிக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இது குறித்து, அவர் கூறியதாவது: நான் கண்டுபிடித்த, மிக உயர் வெப்பநிலையை தாங்கும் 'கோபோனியம் அலாய்' குறித்து அறிந்த அமெரிக்க விஞ்ஞானிகள், என்னை சந்தித்தார்கள். நாசாவில் இருந்தும், எனக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், எதையும் என் நாட்டிற்காக செய்யவே விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். இவரின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.