தனது மகனின் வருங்கால மாமியாருடன் கல்யாணத்துக்கு முன்பு ஓடிப்போன அந்த ஜோடி தற்போது ஊர் திரும்பியுள்ளனர்.
சூரத்தை சமீபத்தில் பரபரப்புக்குள்ளாக்கியது இந்த ஜோடி. சூரத்தைச் சேர்ந்த அந்த 48 வயதுள்ள ஒருவர் தனது மகனுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தார். அந்தப் பெண்ணின் தாயார் வேறு யாருமல்ல, மாப்பிள்ளையின் அப்பாவோட சிறு வயது காதலி!
இளம் வயதில் இவர்களது காதலுக்கு இரு வீடுகளிலும் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் பிரிந்தனர். அவர்களுக்கு வேறு நபர்களுடன் திருமணமும் நடந்தது. இருந்தாலும் இரண்டு பேரும் மனதால் பிரியவில்லை. உள்ளுக்குள் காதலை கள்ளத்தனமாக வளர்த்துக் கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில்தான் தங்களது பிள்ளைகளுக்கு நிச்சயம் செய்தனர். இந்த சமயத்தில் பழைய காதல் வந்து மனசை கலைக்க இருவரும் கல்யாணத்துக்கு முன்னாபு ஓடிப் போய் விட்டனர். இரு குடும்பமும் அதிர்ந்து போனது. நிலை குலைந்து போன குடும்பத்தினர் கல்யாணத்தை ரத்து செய்தனர்.
இந்த நிலையில் இந்த ஜோடி தற்போது அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இரு குடும்பத்தினரும் இவர்களிடம். சரியாக பேசுவது இல்லை. இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் முகுல் கூறுகையில், அவரை ஏற்க நான் விரும்பவில்லை. உண்மையிலேயே திருந்தி வருவதாக அவர் கூறினால் ஓடிப் போன உடனேயே வந்திருக்க வேண்டும். ஆனால் பல நாட்கள் கழித்து சாவகாசமாக அவர் வந்துள்ளார். இன்னொரு ஆணுடன் பல நாட்கள் தங்கி விட்டு வந்தவளை நான் ஏற்க முடியாது என்று கூறி விட்டார்.
அந்தப் பெண்ணின் முன்னாள் காதலரை அவரது குடும்பத்தினர் அரைகுறையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரோ தனது முன்னாள் காதலிக்கு தன்னால் ஏற்பட்ட சிக்கலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அதேசமயம், தன்னால் தனது முன்னாள் காதலிக்கு அவரது வீட்டில் வேதனை ஏற்பட்டால் அதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.