மூன்று முறை ஒரே பெண்ணை திருமணம் செய்த நாமக்கல் இளைஞர்


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சாணார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தரணி. எம்.டெக் வரை படித்துள்ள இவர், ஸ்வீடன் நாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, இவருக்கும், அந்நாட்டை சேர்ந்த மரினா சூசேன் என்ற பெண்ணிற்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நாட்களுக்கு பிறகு இவர்களின் நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இருவீட்டாரின் சம்மதமும் பெற்றதால் காதலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மரினா சூசேன் , கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருதரப்பு பெற்றோரும் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தனர்.


திருமணத்தை தமிழ் மற்றும் கிறித்தவ சம்பிரதாயங்களின்படி ஒரே நாளில் நடத்திவிட வேண்டும் என்பதுதான் அது. அதற்கு மணமக்கள் இருவருமே ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தரணி - மரினா சூசேன் ஆகியோரின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இதையடுத்து, ஸ்வீடன் பெண்ணுக்கு தமிழ் கலாச்சாரப்படி, திருச்செங்கோட்டில் தரணியுடன் வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. பாரம்பரிய முறையில் மணமகன் வெள்ளை நிறத்தில் பட்டு வேட்டி, பட்டு சட்டையும், ஸ்வீடன் நாட்டு பெண் பட்டுச்சேலையும் அணிந்து இருந்தனர்.


தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடந்தாலும், அதைத்தொடர்ந்து கிறித்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது. இதில் மணமகன் உறவினர்கள் மட்டுமின்றி மணப்பெண் தரப்பில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மணமகனின் விருப்பத்திற்கு இணங்க சுயமரியாதை திருமணமும் நடத்திவைக்கப்பட்டது.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு