கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்.
கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பதால் பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதில் 20 ஆயிரம் தொழிலாளர்கள் இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதால் பெரும்பாலான பேருந்துகள் ஓடாது என தொழிற்சங்கங்கள்அறிவித்துள்ளன.போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக ஏற்க வலியுறுத்தி அண்மையில் தெலுங்கானாவில் 52 நாட்களுக்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.அவர்களின் கோரிக்கையை மாநில அரசு ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதே போன்று ஊதிய உயர்வு, மருத்துவ சலுகைகள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கர்நாடகப் போக்குவரத்து ஊழியர்களும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இந்த கோரிக்கையை அரசு ஏற்றால் மாநில அரசுக்கு 6500 கோடி ரூபாய் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.இன்று பெங்களூரின் freedom park ல் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.