பல்லடம்; நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை கட்டி மிரட்டி பல லட்சம் கொள்ளை

பல்லடம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை கட்டி மிரட்டி பல லட்சம் கொள்ளையடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் வளையங்காடு உள்ளது. அப்பகுதியில் சுந்தரேசன் வயது 54 என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் கலையரசி வயது 50. இவர்களுக்கு 25 வயதுள்ள ஆதிட் என்ற மகன் உள்ளார். சுந்தரேசன் அந்த பகுதியில் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று இரவு குடும்பத்தினருடன் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் சுந்தரேசனுக்கு ஒரு போன் வந்தது.

இதையடுத்து அவர் போனை எடுத்து கொண்டு வீட்டின் வராண்டாவிற்கு  வந்து பேசி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் 3 மர்மநபர்கள் முகமூடி அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். இதை பார்த்த அவர் சத்தம் போட முயன்றார். ஆனால் அதற்குள் அவர்கள் சுந்தரேசனை கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளனர் . மேலும் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவியையும் எழுப்பி அவர் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த வைர கம்மல், மோதிரம், செயின் உள்பட 13½ பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் பணத்தையும் கொள்ளையடித்தனர். பின்னர் சுந்தரேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டிற்குள் விட்டு வெளிபக்கமாக பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து சுந்தரேசன் சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சுந்தரேசனிடம் நடத்திய விசாரணையில் திருட வந்த மர்ம நபர்களில் ஒருவர் இந்தியில் பேசியதாக தெரிவித்தார். எனவே இதில் வடமாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு