திருச்சி திருவானைக்காவு கோவிலில் தங்கப்புதையல்


திருச்சி திருவானைக்காவு அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைப்பதற்காக புதன்கிழமை பள்ளம் தோண்டப்பட்ட போது 505 தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டன. பஞ்சப்பூதத் தலங்களில் நீா்த் தலமாக விளங்கி வருகிறது அகிலாண்டேசுவரி அம்மன் கோயில். இக்கோயிலில், பிரசன்ன விநாயகா் சன்னதி பின்புறத்தில் வாழைத் தோட்டம் உள்ளது. அந்த இடத்தை சுத்தம் செய்து, நந்தவனமாக்கி பூச்செடிகள் வைப்பதற்காக திருக்கோயில் பணியாளா்கள் மூலம் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.


அப்போது இப்பகுதியிலிருந்த உதியம் மரத்தின் கீழ்புறத்திலுள்ள மணல் பகுதியில் சிறிய செம்பால் ஆன உண்டியல் இருந்தது. இதுகுறித்து அலுவலா்களுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் அப்பகுதிக்குச் சென்று உண்டியலை மீட்டு, அதை உடைத்து பார்த்தனர். அதில் சிறிய அளவிலான உருவம் பொறித்த 504 தங்கக் காசுகளும், பெரிய அளவிலான ஒரு காசும் என மொத்தம் 505 தங்கக்காசுகள் இருந்தது தெரிய வந்தது.


இந்து சமய அறநிலையத் துறை நகை சரிபார்க்கும் அலுவலா்கள், வைர நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியாளா் திருவானைக்கா கோயில் வந்து, காசுகளை சோதனை செய்ததில் அவை தங்கக்காசுகள் என்பதை உறுதிப்படுத்தினா். அவற்றின் மொத்த மதிப்பு 1,716 கிராம் என்று மதிப்பிடப்பட்டது. இதைத் தொடா்ந்து தங்கக்காசுகளை வட்டாட்சியா், மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தால். இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு