கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் சரியான உணவு தேர்வு செய்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் சரியான உணவு தேர்வு செய்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



பெட்காட்  நிலகிரி மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணி தலைமை தாங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொருப்பசிரியர் கோமதி வரவேற்றார். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பேசும்போது.



உணவுகளை தேர்வு செய்யும் போது சரியான உணவுகளை ஊட்ட சத்து உள்ள உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்.  விளம்பரங்களில் வருபவை அனைத்தும் கற்பனை கட்சியே.  உடல் மனம் வளர்ச்சி பெற, நாம் சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். விட்டமின்கள் குறைபாடுகளை போக்க ஊட்ட சத்துக்களை சேர்த்து செறிவூட்டிய உணவுகளை அதிகம் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  அயோடின், விட்டமின்கள், இரும்பு சத்துக்களை நாம் அதிகம் பயன்படுத்தும் உணவுகளில் சேர்த்து தருகிறது.  காலாவதி உணவுகள், கலப்பட உணவுகளை கண்டறிந்து உணவு துறை அல்லது மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புகார் அனுப்ப வேண்டும் என்றார்.



தமிழ்நாடு நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பசவராஜ் பேசும்போது


உணவுகள் தற்போது நிறம், சுவையூட்டிகள், ஒரே தன்மையுள்ள பொருட்களை சேர்த்து பிளண்ட் செய்து தருதல் போன்ற பல நிலைகளில் தரப்படுகிறது.  இவற்றில் அளவுக்கு அதிகமாக சேர்க்கும்போது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.  அதுபோல குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்களில் சுவைக்கும், கெடாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது.  இவற்றை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.



கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம். உணவு கலப்படம் எளிதில் கண்டறியும் முறைகளை கண்டறிந்து, உணவில் கலப்படம் இருந்தால் அவற்றை தவிர்பதோடு, புகாரும் தெரிவிக்க வேண்டும்.  காலாவதி உணவுகளை வாங்காமல் பாதுகாப்பான உணவுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார்.


தொடர்ந்து உணவு பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோமதி நன்றி கூறினார்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு