மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 32). இவர் செல்லூர் பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலையில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் கடைக்கு வந்துள்ளனர். அப்போது 2 சிறுமிகளிடமும் நைசாக பேசி கடைக்குள் சங்கர் கணேஷ் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சங்கர் கணேசை கைது செய்தனர்.