இதைத்தொடர்ந்து திருமுருகன் பூண்டி காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் கை கழுவும் முறை மற்றும் கொரோனா வைரஸ் குறித்து பொது மக்களிடையே விழிப்புணவை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி அனிஷ் ஃ பாத்திமா தலைமையில் அப்பகுதியில் 2 ம் வகுப்பு முதல், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகள் ஜெயலட்சுமி, தமிழ்செல்வன், கவின், கோபிகா, ஃபஹீமா பர்வீன்.ஆகியோர் ஒன்றிணைந்து தாங்களாகவே முன்வந்து இதனை செய்ய முடிவு செய்து நெசவாளர் காலனி மற்றும் நெசவாளர் காலனி விரிவாக்கம், சூர்யா நகர் பகுதி முழுவதும் துண்டு பிரசுரம் வழங்கியும், கை கழுவும் முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதனை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
அதே போல் திருப்பூர், அவிநாசி டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அக்னி துளிர்கள் அறக்கட்டளை சார்பில் அவிநாசியில் பல பகுதிகளில் “கொரோனோ” வைரஸ் தடுப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அக்னி துளிர்கள் அறக்கட்டளை தலைவர் பிரேமானந்தம், செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ” கொரோனோ “வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவிநாசி பஸ் நிலையம், பள்ளிவாசல், அவினாசியில் உள்ள 18 வார்டுகள், அவிநாசி ஒன்றிய பகுதியில் உள்ள நம்பியாம்பாளையம், செம்பியநல்லூர், முறியாண்டாம்பாளையம், வேலாயுதம்பாளையம் பஞ்சாயத்து பகுதிகளிலும் வழங்கினர்.