திருப்பூர் குமார் நகர் பகுதியில் 144 தடை உத்தரவால் வெளியூருக்கு செல்ல முடியாமல் உணவின்றி தவித்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் உணவளித்து ஆதரவளித்தனர்.
கடந்த 24ந் தேதி மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவுவை அடுத்து பல்வேறு ஊர்களை சார்ந்தவர்கள் ஊருக்கு செல்ல முடியாமல் ரெயில் நிலையங்களிலும் பிளாட்பாம்களிலும் உணவின்றி சுற்றி திரிந்தவர்களை தானக முன்வந்து அவர்களுக்கு தேவையான உணவுகளை அளித்து வருகின்றனர.
மேலும் இவர்களுக்கு ரோட்டரி சங்கம், சேவா சமிதி மற்றும் அப்பகுதியை சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமார் நகர் முருங்கப்பாளையம் அரசு குடியிருப்பு அருகில் குடியிருந்து கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலையிலல்லாமல் பாதிக்கப்பட்டு உணவில்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு முருங்கபாளையம் ஹவுசிங் யூனிட் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஜாபர் அலி, மும்தாஜ், விஜயா, புஷ்பலதா, ஆமினா பீவி, வனிதா ஆகியோர்கள் உணவு ஏற்பாடு செய்து அவர்களுக்கு வழங்கினர்.உணவின்றி
தவித்த 100க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு அப்பகுதி பொதுமக்களும் பாராட்டினர்.