பங்குச் சந்தையையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்; 12 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி
கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம், எச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிய அம்சங்கள் கடந்த சில தினங்களாக சர்வதேச பங்குச் சந்தைகளை ஆட்டம்காணச் செய்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 

 

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur

 

இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, சென்செக்ஸ் 2000க்கும் அதிகமான புள்ளிகள் வரை சரிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்யும் கடுமையாக வீழ்ச்சி கண்டது. பிற்பகல் நிலவரப்படி சென்செக்ஸ் 3100 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. இது 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவாகும். நிப்டி 9600 புள்ளிகளுக்கு கீழே சென்றது. 

 


வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிந்து, 32778 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 868 புள்ளிகள் சரிந்து 9590  என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.  எச்டிஎப்சி, ரிலையன்ஸ்,  ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட இந்த சரிவினால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 11.42 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

 

கொரோனா வைரஸ் பரவுவதால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 30 நாட்கள் அமெரிக்காவுக்கு  வர தடை விதிக்கப்பட்டுள்ளது, அனைத்து சுற்றுலா விசாக்களையும் ஏப்ரல் 15-ம் தேதி வரை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்த அம்சங்களும் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையின் பங்குகள் சரிந்தன. 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image