ரூ.150க்கு இவ்வளவு காய்கறிகளா, அசத்தும் தேனி உழவர் சந்தை வியாபாரிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பால் விற்பனைக்கடைகள் திறந்திருக்கலாம் என்றும் ஆனால் அதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இந்நிலையில் தேனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனையின்போது விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையிலும், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் உழவர் சந்தை நிர்வாகம், காய்கறி தொகுப்பினை ஒரு பையில் வைத்து விற்று வருகிறது. இப்படி உருவாக்கப்பட்ட, காய்கறி தொகுப்பு ரூ.150க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • கத்தரிக்காய் 1/2 கிலோ

  • தக்காளி 1 கிலோ,

  • வெண்டைக்காய் 1/4 கிலோ

  • அவரைக்காய் 1/2 கிலோ

  • முருங்கைக்காய் 1/4 கிலோ

  • பச்சைமிளகாய் 1/4 கிலோ

  • பீன்ஸ் 1/4 கிலோ

  • கேரட் 1/4 கிலோ

  • உருளைக்கிழங்கு 1/2 கிலோ

  • சின்ன வெங்காயம் 1/4 கிலோ

  • பெரிய வெங்காயம் 1/2 கிலோ

  • கறிவேப்பிலை, புதினா,

  • கொத்தமல்லி ஒரு கொத்து,

  • கீரை ஒரு கட்டு,

  • சவ்சவ் 1,

  • நூக்கல் 1/4 கிலோ

  • முள்ளங்கி 1/4 கிலோ

  • வாழைக்காய் 3,


எலுமிச்சை 4 ஆகிய காய்கறிகள் ரூ.150க்கு இருந்த இடத்திலேயே தேடி அலையாமல் கிடைப்பதால் மக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி வருகிறார்கள். இது போல் நடை முறையை அணைத்து ஊர்களிலும் கடைபிடித்தால் பொதுமக்களுக்கு பயனாக இருக்கும்.



Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image