நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு போடப் பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கினை பயன்படுத்தி கொண்டு ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
கடந்த 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட நிலையில், ஏராளமானோர் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர். அப்போது மாலை இரவு நேரத்தில், 16 வயதுடைய சிறுமி ஒருவர் தன் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தார். போக்கு வரத்து வசதி எதுவுமே அந்த பகுதியில் இல்லை. அதனால் தன்னுடைய ஆண் நண்பருக்கு போன் செய்து உதவி கேட்டதாக தெரிகிறது. அந்த ஆண் நண்பரும் ஊரடங்கு சூழ்நிலையை பயன்படுத்தி கிளம்பி வரும்போதே 8 நண்பர்களை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். பின்னர் சிறுமியிடம் வழியெல்லாம் ஊரடங்கு கெடுபிடி அதிகமாக உள்ளது ரோடு வழியாக போக முடியாது போலீஸ் இருப்பார்கள் காட்டு வழியில் போயிடலாம் என்று சொல்லி உள்ளார். எப்படியே வீடு போய் சேர்ந்தால் போதும் என்று நினைத்து அதற்கு சம்மதித்துள்ளார் சிறுமி. நடுக்காட்டிக்கு போனதுமே சிறுமியை ஆண் நண்பர் உட்பட 9 பேரும் சேர்ந்து பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர். மேலும் சிறுமியை அந்த காட்டுக் குள்ளேயே அப்படியே விட்டு விட்டும் சென்றுள்ளனர். நடுக்காட்டில், இருட்டில் வழி தெரியாமல் அழுதுள்ளார் சிறுமி. பிறகு தட்டுத்தடுமாறி நடந்தே வீடு வந்து சேர்ந்து பெற்றோரிடம் கதறி உள்ளார்.. இதையடுத்து போலீசார்தான் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை சீரழித்தவர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த 9 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.