இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயம் அதிகமாகவும், அதிக எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய 16 பகுதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அவைகள் தமிழகத்தில் ஈரோடு, தில்ஷாத் கார்டன், நிஜாமுதீன் டெல்லி, பத்தினம்திட்டா, காசர்கோடு கேரளா, நொய்டா, மீரட் உத்தரப்பிரதேசம், பில்வாரா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், மும்பை, புனே, மகாராஷ்டிரா, அகமதாபாத், குஜராத், இந்தூர் மத்தியப் பிரதேசம், நவன்ஷஹர் பஞ்சாப், பெங்களூர் கர்நாடகா மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள். இந்த 16 இடங்களிலும், கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. எனவே, இப்பகுதியில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25ஐ நோக்கி உயர்ந்துள்ளது. ஈரோட்டில் 16,456 குடும்பங்களைச் சேர்ந்த 57,734 நபர்கள் தனிமைப்படுத்தப் பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.