ரூ 2 லட்சம் மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை சேவூர் ஜி. வேலுசாமி வழங்கினார்
சேவூர் ஊராட்சி மன்றத்தலைவர் சேவூர் ஜி. வேலுசாமி  தனது சொந்த செலவில் ரூ 2 லட்சம் மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.


திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பாலிக்காடு, சந்தையம்பாளையம் உள்பட 12 வார்டுகளில் உலகையே உலுக்கி வரும் கொரோனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சேவூர் ஊராட்சித் தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி தனது சொந்த செலவில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இதில் தொடர்ந்து உபயோகிக்கக்கூடிய முகக்கவசம், கிருமி நாசினி, சோப்பு, கைக்குட்டை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். 

 நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர..

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு