இந்தியாவில் பலாத்கார வழக்கில் சிக்கி தப்பி ஓடியவர் நித்தியானந்தா. இவர் பசிபிக் கடற்பரப்பில் ஏதோ ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அந்த தீவையே கைலாசா என்கிற இந்து நாடு எனவும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார். அந்த நாட்டுக்கும் நித்தியானந்தா தான் பிரதமர் என்றும் தெரிவித்து வந்தார். நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளி என்பதால் அவர் தேடப்பட்டு வருகிறார். இண்டர்போல் போலீஸும் நித்திக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவே தாக்காத தேசம் எங்களுடைய கைலாசா என கிண்டலடித்து பேசி வந்தார் நித்தியானந்தா. இதற்கும் அசரவைக்கும் ஆன்மீக விளக்கங் களையும் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த 2 வாரங்களாக நித்தியானந்தா குறித்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்தான் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப் பட்டிருக்கின்றன.
நித்தியானந்தாவின் கைலாசாவும் அந்த பிராந்தியத்தில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நித்தியானந்தாவின் கைலாசாவும் கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கிறதா? அதில் இருந்து நித்தியானந்தா தப்பினாரா? என்ன ஆனார்? என்பது அவரை மீம்ஸ் நாயகனாக கொண்டாடும் நெட்டிசன்களும் நம் மக்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.