திருப்பூர் பாண்டியன்நகர் பேருந்து நிறுத்தத்தில் பல நாட்களாக பசி, பட்டினியுடன் தவித்த 70 வயது மூதாட்டியை நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையினர் மீட்டு அவரது குடும்பத்தினரிடம்
.
பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ரெத்தினம்மா என்பவர் கடந்த 3 வார காலமாகவே பேருந்து நிலையம் பக்கத்தில் ஆதரவின்றி அரை குறை ஆடையுடனும், உணவின்றியும், உடல் நலம் பாதித்து நடக்க இயலாத நிலையில் படுத்திருப்பது பற்றி அனுப்பர்பாளையத்தில் இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளைக்கு பாண்டியன் நகர் பகுதி பொதுமக்கள் தொடர்பு கொண்டு கொண்டனர்.
இதனையடுத்து நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ், உறுப்பினர் சிவகாமி மற்றும் அப்பகுதியைச் சார்ந்த கோகிலவாணி என்ற பெண் மூலம் பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் பக்கத்திலையே சேலைகளில் மறைப்பு கட்டி அந்த மூதாட்டியை குளிக்க வைத்தும், புத்தாடைகள் அணிவித்தும் அவரின் சோர்வு நிலையறிந்து பழரசம் வாங்கி கொடுத்து பின் அந்த மூதாட்டியுடைய பேரன்கள் கெளதம், திருப்ப ி ஆகியோர் பள்ளிக்குச் சென்று அழைத்து வந்து அவர்களுடன் ஆட்டோவில் அழைத்து சென்று பாண்டியன் நகர் பகுதியில் உள்ள வீட்டில் மூதாட்டியை ஒப்படைத்து ஆறுதல் கூறி விட்டு வந்தனர்.