வருகிற 8-ந் தேதிக்குள் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்ய உத்தரவு

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. பழைய பஸ் நிலையத்தில் 100 கடைகள் உள்ளன.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இந்த கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் கடை வாடகையை 100 சதவீதம் உயர்த்தி அறிவித்ததாக தெரிகிறது. இதை எதிர்த்து பழைய பஸ் நிலையத்தில் வாடகைக்கு கடை வைத்துள்ள 63 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதனால் வாடகை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.


 

இந்தநிலையில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் 50 சதவீத வாடகை கட்டண உயர்வை மாநகராட்சிக்கு செலுத்தவும், வருகிற 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்த கடைகளை காலி செய்து மாநகராட்சி வசம் ஒப்படைக்கவும் ஐகோர்ட்டு கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வாடகை கட்டண உயர்வை செலுத்த 3 வார அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இதுகுறித்து அறிவிப்பு நோட்டீசு சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் 2 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை மாநகராட்சி உதவி ஆணையாளர் கண்ணன், உதவி ஆணையாளர்(வருவாய்) தங்கவேல்ராஜன் ஆகியோர் பழைய பஸ் நிலையம் சென்று அங்குள்ள கடைக்காரர்களிடம் வருகிற 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் கடைகளை காலி செய்து மாநகராட்சி வசம் ஒப்படைக்க அறிவுறுத்தினர்.

 

அங்கிருந்த கடைக்காரர்கள் தங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிகமாக கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். வாடகை கட்டண உயர்வை நிலுவையில்லாமல் முழுமையாக செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு