அவினாசி அருகே சேவூரில், கொரோனா வைரஸ் தடுப்புக்கான
நடவடிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவர் சேயூர் வேலுசாமி முன்னின்று
மேற்கொண்டார்.
பிற உலக நாடுகளைப் போல இந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளது. டெல்லி, மும்பை, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய கொடிய நோய் மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அவினாசி அடுத்துள்ள சேவூர் ஊராட்சி சார்பில், மக்கள் அதிகம் கூடும் இடங்களான போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாப், கைகாட்டி ரவுண்டானா பகுதிகளிலும், கோபி ரோடு, ராஜவீதி ஆகிய பகுதிகளிலும் தற்போது 12 ம் வகுப்பு தேர்வு நடைபெறும் சேவூர் அரசுமேல் நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளிலும்
கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு நோட்டீசுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து பொதுமக்கள் தன்னையும், வீட்டையும் எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.கைகளை சோப்பு போட்டு கழுவும் விதத்தையும் செயல் விளக்கத்தோடு செய்து காட்டப்பட்டது.
சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதிக்கு வரும் தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இருமல், சளி, ஜலதோசம் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், ஊராட்சி செயலாளர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.