இதுவரை இந்தியயாவை தாக்கிய வைரஸ்களும், உயிரிழப்புகளும்,

உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன் 1974-ல் சின்னம்மை தாக்கம் இந்தியாவை உலுக்கியெடுத்தது. சின்னம்மை இந்தியாவை அலறவிட்டது என்றால் அது மிகையல்ல. சின்னம்மை நோயால் 61,482 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டதுடன், 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

1994-ம் ஆண்டு குஜராத்தின் சூரத் பகுதியில் ஏற்பட்ட பிளேக் நோயால் 693 பேர் பாதிக்கப்பட்டனர். 56 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் 2006 ஆம் ஆண்டு 3,613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதில் 50 பேர் உயிரிழந்தனர். அதே 2006ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட சிக்கன்குனியா தாக்கம், மிகக்கடுமையான வைரஸ் தாக்குதலாக இருந்தது. சுமார் 11,02,724 பேர் பாதிக்கப்பட்டனர் எனினும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.


2009-ம் ஆண்டு குஜராத்தில் ஹெபடைடிஸ் தாக்கம் ஏற்பட்டு, 125 பேர் பாதிக்கப்பட்டதோடு, 49 பேர் உயிரிழந்தனர். அதே 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலினால் 36,240 பேர் பாதிக்கப்பட்டு, 1,833 பேர் உயிரிழந்தனர்.

2014ஆம் ஆண்டு ஒடிசாவில் மஞ்சள் காமாலையால் 3,966 பேர் பாதிக்கப்பட்டு, 36 பேர் உயிரிழந்தனர். 2015 ஆம் ஆண்டு மீண்டும் பன்றிக்காய்ச்சல் தனது தாக்குதலை தொடங்கியது. அப்போது பன்றிக்காய்ச்சலால் 33,761 பேர் பாதிக்கப்பட்டதுடன், 2,035 பேர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டில் சிம்லாவில் 1600 பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, 10 பேர் உயிரிழந்தனர். 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட நிபா வைரஸ் தாக்கத்தால், 19 பேர் தான் பாதிக்கப்பட்டனர். எனினும், அதில் 18 பேர் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு, பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் 647 பேர் பாதிக்கப்பட்டதுடன், 161 பேர் உயிரிழந்தனர். தற்போது கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image