திருப்பூர் குர்பானி அறக்கட்டளையின் சார்பில் சுய ஊரடங்கு உத்திரவு முதல், 15 நாளைக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.
கொரானா என்ற கொடிய நோயின் காரணமாக உலகம் முழுவதும் அச்ச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 22ந் தேதி 22 மணி நேர சுய ஊரடங்கு உத்திராவினை மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்திருந்தது. இந்த உத்திராவினை தொடர்ந்து தமிழகத்தில் காலை 7 மணி முதல், மறுநாள் காலை 5 மணி வரை பஸ், ரெயில், ஆட்டோ, கார் மற்றும் உணவு விடுதி கடைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்களும் அவரவர் வீடுகளில் இருந்து வெளியில் வரவில்லை. அதனால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தீவிர தடுப்பு பணியில் இருந்த மருத்துவர்களும், செவிலியர்கள், அவர்களுடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர் உணவின்றி பெரிதும் சிரமப்பட்டனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, குர்பானி அறக்கட்டளை சார்பில் சுகாதார முறையில் தயார் செய்து, அவற்றை பார்சல் செய்து அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த 250க்கும் மேற்பட்ட அனைவருக்கும் 21ந் தேதி முதல காலை டிபன், மதிய உணவு, இரவு டிபன் ஆகியவரை வழங்கி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு பகல் 11 மணியளவில் பழரச ஜூஸ், ஸ்நேக்ஸ் மாலை 6 மணியளவில் டீ, காபி மற்றும் ஸ்நேக்ஸ் ஆகியவற்றையும் வழங்கினார். இது தவிர பஸ் நிலையம், ரெயில் நிலையம் கோவில்களில் உணவின்றி தவித்தவர்களுக்கும் உணவு வழங்கினர். வருகின்ற 15 நாட்கள் முடிந்து மேலும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டால் தொடர்ந்து உணவு தயாரித்து வழங்க தயாராக இருப்பதாக அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.