கொச்சி ; சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார் பொறுப்பை பறித்து போப் உத்தரவு!

சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார் பொறுப்பை பறித்து போப் உத்தரவு!


கொச்சி: கேரளாவில், சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில், ராபின் வடக்கம்சேரி என்ற பாதிரியாரை, பொறுப்பில் இருந்து நீக்கி, போப் பிரான்சிஸ் உத்தரவிட்டு உள்ளார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. குற்றச்சாட்டுஇங்குள்ள, வயநாடு மாவட்டத்தில், மனன்தவடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சர்ச்சில், ராபின் வடக்கம்சேரி, 48, என்பவர், பாதிரியாராக இருந்தார். சர்ச்சுக்கு வந்த 16 வயது சிறுமியை, பாதிரியார் ராபின் வடக்கம் சேரி, பாலியல் பலாத்காரம் செய்து, கருவுறச் செய்தததாக, மூன்று ஆண்டுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாதிரியார் பொறுப்பில் இருந்து, அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.இந்த வழக்கில் அவருக்கு,20 ஆண்டு சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், சர்ச் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-பாதிரியாருக்கான கடமைகளை செய்ய, ராபின் வடக்கம்சேரிக்கு தடை விதித்தும், பாதிரியாருக்கான உரிமைகளை அவரிடம் இருந்து பறித்தும், போப் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். இனி, அவர் பாதிரியாராக கருதப்படமாட்டார். இவ்வாறு  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு