திருப்பூர் ஃ ப்ரண்ட்லைன் மிலேனியம் மேல்நிலைப் பள்ளியில் வானியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் ஃ ப்ரண்ட்லைன் மிலேனியம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் அறிவைத் தூண்டும் வகையில், பேரண்டத்தில்
கோள்களுக்கிடையே நிகழும் நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் டாக்டர்.சிவசாமி, பள்ளியின் செயலாளர் டாக்டர்.சிவகாமி, பள்ளியின் இயக்குநர் சக்திநந்தன் மற்றும் துணை செயலாளர் திருமதி. வைஷ்ணவி சக்திநந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இயற்பியலாளர் உமாசங்கர் கலந்து கொண்டு, வானில் உள்ள நட்சத்திரக் கூட்டங்கள் குறித்தும், அந்த நட்சத்திரக் கூட்டங்கள் என்னென்ன குடும்பத்தைச் சார்ந்தது என்பது குறித்தும் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு காண்பித்தார்.
மேலும் தொலைநோக்கியின் மூலமாக நிலவு, நட்சத்திரம், யுரேனஸ், வீனஸ், நெபுலா முதலான பல்வேறு கோள்களும், விண்மீன் கூட்டங்களும்
மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் நிலவிலும், நட்சத்திரக் கூட்டங்களிலும் நடைபெறும் மாற்றங்களை தொலைநோக்கியின்
மூலமாக கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.இரவின் அழகை இரசித்ததுடன், வானியல் மாற்றங்களையும் கண்டு மகிழ்ச்சியுற்று வானியல் அறிவைப் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் போது பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்