திருப்பூர்; ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கிய த.மு.மு.க.!










திருப்பூர் த.மு.மு.க.,சார்பில் 144  ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டது முதல், தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.

கொரோனாவின் கொடிய தாக்குதலில் இருந்து தேசத்தையும் தேச மக்களையும் காக்க தற்ப்போது நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது.. இவ்வேளையில் திருப்பூரில் மருத்துவ துறையினருக்கும், காவல் துறையினருக்கும், வருவாய்த்துறை யினருக்கும், ஊடகத்துறையினருக்கும் இன்னும் உணவில்லாது தவிப்போறுக்கும் 25.3.2020 ந் தேதி முதல் தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்ற கழகம் சார்பாக சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி முக கவசம் கை கவசம் மற்றும் பாதுகாப்பான உடையுடன் உணவு வழங்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது

தற்ப்போதைய அவசரநிலை சூழலில் நாம் அனைவரும் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்க்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, கொரானா என்ற கொடிய நோயினை விரட்டுவோம்.

மேலும் வரும் 14ந் தேதி வரை 21 நாட்களக்கு 144 தடை உத்திரவு போடப்பட்டு மாவட்ட எல்லைக்கு போலீசார் சீல் வைத்து உள்ளனர்.



 இதனை தொடர்ந்து  திருப்பூரில், பஸ், ரெயில், ஆட்டோ, கார் மற்றும் உணவு விடுதி கடைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்களும் அவரவர் வீடுகளில் இருந்து வெளியில் வரவில்லை.  ஆகியோர் உணவின்றி பெரிதும் சிரமப்பட்டனர்.


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருப்பூர் வடக்கு மாவட்ட த.மு.மு.க., சார்பில் சுகாதார முறையில் தயார் செய்து, அவற்றை பார்சல் செய்து காலை, மதியம், இரவு என 3 வேலை உணவு வழங்கி வருகின்றனர். மேலும் வீட்டில் இருப்பவர்கள், நோயாளிகள் ஏழை, எளிய மக்கள், முதியவர்கள்

ஆகியோர்க்கு. உணவு தேவைப்படும் பட்சத்தில் அவர்களக்கும் வீடு தேடி சென்று வழங்கி வருகின்றனர்.

இது தவிர பஸ் நிலையம், ரெயில் நிலையம் கோவில்களில் உணவின்றி தவித்தவர்களுக்கும் உணவு வழங்கி வருகின்றனர்.

 










 


 









Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு