உற்பத்தி பொருட்கள் கொண்டு செல்ல தெற்கு இரயில்வே ஏற்பாடு.
சேலம் இரயில்வே கோட்டத்தில் சிறப்பு சரக்கு வேகன் வசதி செய்யப்பட்டுள்ளதாக முதுநிலை வணிக மேலாளர் தெரிவித்துள்ளார்.

கோவிட் - 19 பிரச்சினை நீடிக்கும் நிலையில்  உணவு தானியங்கள், அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி ஆகியவற்றை நாடு முழுவதும் துரிதமாக கொண்டு செல்லும் சேவையில் இந்திய இரயில்வே ஈடுபட்டு வருகிறது. தற்போது சிறப்பம்சமாக,  மருந்துகள், மருத்துவ பொருட்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை வணிகர்கள், உற்பத்தியாளர்கள் மாநில அரசுகள் ஆகியவை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்க வசதியாக, இந்திய இரயில்வே நிர்வாகம் சிறப்பு சரக்கு வேகன்களை இயக்குகிறது. குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவை- பட்டேல் நகர் ( டெல்லி மண்டலம்)- கோவை, கோவை- ராஜ்கோட்- கோவை , கோவை- சேலம் ஆகிய வழித்தடங்களில் சரக்கு வாகனங்களை இயக்க உள்ளது. எனவே, வர்த்தகர்களும், உற்பத்தியாளர்களும், மாநில அரசுகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான சரக்குகளை வெளி இடங்களுக்கு அனுப்ப பயன்படுத்தி கொள்ளலாம். இது தொடர்பாக, சேலம் இரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர்  இ.ஹரிகிருஷ்ணன் தெரிவிக்கையில், சேலம் கோட்டத்தின் முக்கிய இரயில் நிலையங்களில் உள்ள வணிக ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு சரக்குகளை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

தற்போதுள்ள சரக்கு கட்டண அடிப்படையில் சரக்குகளை அனுப்பலாம். தனி நபர்கள் அல்லது குழுக்களாக இணைந்து பார்சல்களை அனுப்பலாம் எனினும், குறைந்தபட்சம் 15 பார்சல் வேன்களில் சரக்குகள் அனுப்பப்பட வேண்டும் . (ஒரு சரக்கு வேகன்  23 டன் எடை கொண்டது) மேற்குறிப்பிட்ட வழித்தடங்கள் தவிர வேறு இடங்களுக்கும் தேவைப்பட்டால் சரக்கு வேகன்கள் இயக்கப்படும். இதற்கான விசாரணைகள் மற்றும் முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. உற்பத்தி நிறுவனங்கள் வர்த்தகர்கள் தனி நபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த வசதியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வணிக ஆய்வாளர்கள் செல்போன் எண்கள்:

Interested parties may approach the Railway Parcel Offices for registration or may call Concerned Commercial inspector of region Coimbatore 9003956955, Tiruppur 9600956238, Erode 9600956231, Salem 9003956957, Nammakkal and Chinnasalem 9003956956, Karur 8056256965.

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image