திருப்பூர் மாவட்டம் பல்லடம், அருகே உள்ள மாதப்பூர் பஞ்சாயத்து துப்புரவு ஊழியர்களை பூ தூவி வரவேற்று, கொராணா எதிர்ப்பு தூய்மைப் பணியை ஊக்குவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராாட்.சி பகுதியில் பல்வேறு கிராமப்புறத்தில் உள்ள நோய் எதிர்ப்பு தூய்மைப் பணியில் ஈடுபட துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராாட்சி அலுவலர்களை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், தற்போது கிராமங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மக்களையும் தூய்மையாக கிருமிகள் பரவாத பகுதிகளாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தன் பஞ்சாயத்து ஊழியர்களுடன் முன்வைத்து இதை சிறப்பாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கடைபிடித்து வருவதாகவும் இது எப்போதுமே தொடரும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஊழியர்களை ஊக்குவித்து வரும் வகையில் செயல்பட்டு வரும் பஞ்சாயத்து தலைவர் அசோக் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.