கடம்பூர் ரயில்வே ஸ்டேஷன் புதிய கட்டிட திறப்பு விழா !
தென் மாவட்டத்திற்க்கு ஒரே ஒரு ரயில்வே பாதை மட்டுமே உள்ளதால் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் கிராசிங்க்கில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால் பயணிகள் சிரமப்படுகிறனர்.அதனால் இரட்டை வழி ரயில் பாதை அமைக்க மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி வரை நிதி ஒதுக்கி ரயில் விகாஸ் நிகம் மூலமும் கல்பத்ரூபவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் மூலமும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கடம்பூர் ரயில் நிலையம் முதல் தட்டப்பாறை, மணியாச்சி வரை 35 கி.மீட்டர் தூரம் இரட்டை வழிப் பாதை பணிகள் மின் மயமாக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது.
கடம்பூரில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே ஸ்டேஷன் ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகர் தலைமையில் கோட்ட மேலாளர் லெனின் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது. அதன் பின்னர் நவீனமாக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டு, வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதன் பின்னர் கடம்பூரிலிருந்து மணியாச்சி வழியாக தட்டப்பாறை வரை 35 கி.மீ. தூரம் இரட்டை பாதை பணிகள் முடிவடைந்துள்ளது.
முதற்கட்டமாக கடம்பூரிலிருந்து 11 கி.மீட்டர் தூரம் மணியாச்சி வரை டிராலி சோதனை ரயில் ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஒட்டம் திருப்தியாக முடிந்ததால், இரட்டை பாதையில் விரைவு ரயில் மூலம் சோதனை ரயில் ஓட்டம் இயக்கப்படுகிறது.